Skip to content

மாணவியை ஓடவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்….கண்டக்டர் டிஸ்மிஸ்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் 12 ம் வகுப்பு மாணவி  இன்று காலை தேர்வு எழுத செல்ல  பஸ்சுக்கு  காத்திருந்த நிலையில் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசு பேருந்து கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றது.

இந்த பஸ்சை விட்டால் தேர்வுக்கு செல்ல தாமதம் ஏற்பட்டு விடும் என கருதிய  மாணவி,  நிற்காமல் சென்ற பஸ்சை  பின்தொடர்ந்து ஓடினார். 50 மீட்டர் வரை பஸ்சும் நிற்காமல் சென்றது. மாணவியும்  ஓடினார்.

பின்னர்  பஸ் நிறுத்தப்பட்டது. மாணவி அந்த பஸ்சில் ஏறி பயணித்தார். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள  கண்காணிப்பு காமிராவில் பதிவானது.  அது சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசனிடம் கேட்டபோது,

அரசு பேருந்து ஓட்டுநர் முனிராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நடத்துனர், அசோக்குமார், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டும் உத்தரவிடப்பட்டது என்றார். ஆம்பூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசனின்   இந்த அதிரடி  நடவடிக்கைக்கு  பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!