சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் டூவீலரில் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே சென்ற போது முன்னாள் சென்ற மாநகர பஸ் முந்தி செல்ல அண்ணன் ரிஷிநாதன் முயன்றார். அப்போது எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத மற்றோரு டூவீலர் உரசியதில் பின்னால் அமர்ந்து இருந்த பிரியங்கா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர்கள் பின்னால் வந்த மாநகர பஸ் பிரியங்கா மீது ஏறி இறங்கியதில் கடுமையாக படுகாயமடைந்தார். இதில் ரிஷிநாதன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். பின்னர் உடனே தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் படுகாயமடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போக்குவரத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பதிவு எண் இல்லாமல் விபத்து ஏற்படுத்தி விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர். அலுவலக பணி முடிந்து அண்ணனுடன் திரும்பி கொண்டு இருந்த பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.