ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். தமிழக அரசும் ஆண்டுதோறும் கலந்துகொள்ளும். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொள்வது உண்டு. எனவே, நாளை குடியரசு தினம் என்பதால் தேநீர் விருந்து நடைபெறவுவதாகவும் அதில் கலந்து கொள்ள திமுக, விசிக, நாதக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது தமிழக அரசும் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகவும் அதற்கான விளக்கத்தையும் வெளியீட்டு அறிவித்துள்ளது.
நாளை டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டதற்காக அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.டங்ஸ்டன் திட்டதிற்கு எதிராக போராட்டம் நடத்திய போராட்ட குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நாளை நடைபெறும் விழாவிற்கு வருகை தர அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவரும் உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டி-க்கு வருகிறேன்!” என உறுதியளித்தார்.
எனவே, நாளை அவர் அரிட்டாபட்டி செல்லவுள்ள காரணத்தால் அளுநர் வழங்கும் தேநீர் விருந்து விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அரசு சார்பில் யாரும் இந்த தேநீர் விருந்து விழாவில் பங்கேற்கமாட்டார்கள் எனவும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.