பொன்முடி எம்எல்ஏவாக நீடிக்கும் நிலையில், அவருக்கு மார்ச் 13-ம் தேதி (நேற்று) மாலை அல்லது 14-ம் தேதி (இன்று) காலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை ஆளுநர் பரிசீலித்து, அதன்பிறகு பதவியேற்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியானது. இதற்கியில் இன்று காலை ஆளுநர் ரவி டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்காமல் இழுத்தடிக்கும் நோக்குடன் இவர் டில்லி சென்றிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டுமானால் அவர்கள் இருக்கும் இடம் தேடி செல்ல வேண்டுமா? கவர்னர் மாளிகையில் இருந்து கருத்துக்களை கேட்க முடியாதா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். ஆளுநரின் டில்லி பயணம், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்யாமல் இழுத்தடிக்கும் முயற்சி என்று திமுக வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.