தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய கவர்னர் ரவி, தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று மாற்றி படித்ததுடன், தமிழக தலைவர்கள் பெயரை படிக்க மறுத்து விட்டதுடன் திராவிட மாடல் அரசு என்பதையும் தவிர்த்தார். இதற்காக அவர் மீது சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ரவியின் தன்னிச்சையான போக்கு குறித்து நேற்று திமுக சார்பில் ஜனாதிபதி முர்முவிடம் புகார் செய்யப்பட்டது. தமிழக முதல்வரின் கடிதமும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு டில்லி அழைப்பு விடுத்தது. இதனால் இன்று காலை அவர் விமானம் மூலம் டில்லி விரைந்தார். 2நாள் அவர் டில்லியில் இருப்பார் . அங்கு ஜனாதிபதி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என தெரிகிறது.