தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை படிக்காமல் தன் இஷ்டத்துக்கு உரையை படித்தார், பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கா், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பன போன்ற வார்த்தைகளை அவர் தவிர்த்து அதற்கு பதிலாக வேறு வார்த்தைகளை பயன்படுத்தினார். இதை முதல்வர் சட்டமன்றத்திலேயே கண்டித்தார். இந்த நிலையில் சட்டமன்றத்தில் இருந்து கவர்னர் வெளிநடப்பு செய்தார். வழக்கமாக சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு தான் கவர்னர் வெளியே செல்வார். ஆனால் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே கவர்னர் வெளிநடப்பு செய்தார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் ஒரு அறிக்கை படித்தார். அதில் கவர்னர் படித்த அறிக்கை சட்டமன்ற அவைகுறிப்பில் இடம் பெறக்கூடாது. அரசு தயாரித்து கொடுத்த உரை தான் சட்டமன்ற அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் கவர்னர் இறுக்கமான முகத்துடன் வெளியேறினார்.