நம்ம ஊர் மோடி பொங்கல் நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை மண்டலம் சார்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எச். ராஜா கலந்து கொண்டார். தொடர்ந்து பொங்கல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார். பின்னர் எச் ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வேண்டுமென்றே ஆளுநர் மற்றும் பாஜகவை தாக்குகிறார்கள். தொடர்ந்து மறைமுகமாக மத்திய அரசையும் தாக்குகிறார்கள். கடந்த 2019 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாடி எப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கினார்களோ அதே போன்று தற்போது உருவாக்குகிறார்கள்.
ஆளுநர் உரையாற்றும் போது சில விஷயங்களை தவிர்த்து பேசியிருக்கிறார் அதற்கு ஒரு முக்கிய காரணம் அதில் எழுதப்பட்டிருந்தது அனைத்தும் பொய்யானவை என்பதற்காகவே அவற்றை தவிர்த்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.