Skip to content
Home » கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Senthil

சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தமிழக கவர்னர் தேநீர் விருந்து அளிக்கும் சம்பிரதாயம் நடைமுறையில் உள்ளது.   இந்த தேநீர் விருந்தில்  தமிழக முதல்வர், அமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள்.  சுதந்திரதினத்தையொட்டி  நாளை இரவு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து

நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க  இயலாது  என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.  நீட் தேர்வு கொள்கையில் தமிழக அரசின் செயல்பாட்டுக்கு எதிராக கவர்னர் செயல்பட்டு வருவதாலும், மசோதாக்களை முடக்கி  வைத்திருப்பதை கண்டித்தும் இந்த புறக்கணிப்பை செய்வதாக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!