தமிழ் கலாசாரத்திற்கு முரணாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படுவதையே கவர்னர் ரவி குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் மதிமுக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. சென்னையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதனை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தை மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதிமுக துணைப்பொதுச்செயலாளர் டாக்டர் ரொக்கையா, வெல்லமண்டி சோமு, அடைக்கலம், மதிமுக கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், திமுக கோட்டத்தலைவர் துர்காதேவி, பகுதி செயலாளர் மோகன்தாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.