தமிழக கவா்னர் ஆர். என். ரவி இன்று மதியம் 2.30 மணிக்கு தீவுத்திடல் வந்து விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதாவிடம் ஆறுதல் கூறினார். அப்போது விஜயகாந்த் மகன்கள்களும் அங்கிருந்தனர். தனது மகன்களையும், தம்பியையும் அப்போது கவர்னருக்கு அறிமுகப்படுத்தினார் பிரேமலதா. 5 நிமிடத்தில் அங்கிருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார்.
