Skip to content
Home » 31ம் தேதி ஓய்வு….. பதவி நீட்டிப்பு கேட்கிறார் கவர்னர் ஆர். என். ரவி

31ம் தேதி ஓய்வு….. பதவி நீட்டிப்பு கேட்கிறார் கவர்னர் ஆர். என். ரவி

கவர்னர்களாக  நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருக்கலாம். அதன்பின்னர், புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம். அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதம் 31-ம் தேதி நிறைவடைகிறது. தற்போது, டில்லி சென்றுள்ள  கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.  தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள்  தமிழக சட்டம் ஒழுங்கு பற்றி  கவர்னர் விவாதித்து வருகிறார் என பரபரப்பு கிளப்பின.

கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைகிறது. ஏற்கனவே, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், காலியாக உள்ள தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் ஆகிய பதவிகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இதுதவிர வேறு சில மாநில கவர்னர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில் தான் ரவி டில்லியில் முகாமிட்டு தனக்கு பதவி நீட்டிப்பு கேட்டு வருவதாக  டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!