தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை இன்று சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. தேர்தல் ெ நருங்கும் நேரத்தில் கவர்னர் பத்திரிகையாளர்களை சந்திப்பது தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஏற்பாடாக இருக்கலாம் என்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
