டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்து கோப்புகளை கவர்னர் ரவிக்கு அனுப்பியது. இது தொடர்பான கோப்பை ரவி, திரும்ப அனுப்பி உள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா என அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் கவர்னர் கேட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்…. கோப்பை திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி
- by Authour
