தமிழக வரலாற்றில், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்படும். நிகழ்ச்சி முடியும்போது தேசிய கீதம் பாடப்படும். இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் கவர்னர் ரவி முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்றும் கவர்னர் ரவி சட்டமன்றத்தில் உரையை படிக்காமல் வெளியேறினார். இது தொடர்பாக கவர்னர் ரவி தனது எக்ஸ்தள பதிவில் வெளிநடப்பு குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில் முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அது ஏற்கப்படவில்லை. பேரவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டு உள்ளது. தேசிய கீதத்தை மதிப்பதே ஒவ்வொருவரின் முதல் கடமை.
இவ்வாறு தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்த கவர்னர் ரவி சில நிமிடங்களிலேயே அதை எக்ஸ்தளத்தில் இருந்து நீக்கி விட்டார்.