Skip to content

வெளிநடப்பு ஏன்? மீண்டும் பதிவேற்றம் செய்த கவர்னர்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது.  ஆண்டின் முதல்  கூட்டம் என்பதால் கவர்னர் உரை  வாசிக்கப்பட வேண்டும். இதற்காக கவர்னர் ரவி  சட்டமன்றத்துக்கு வந்தார்.   தமிழக சட்டமன்றத்தில்  முதன் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்படும். முடியும்போது தான்  தேசிய கீதம் இசைக்கப்படும்.

ஆனால் கவர்னர் ரவி  தேசிய கீதம் முதலிலும் இசைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.  இந்த  நிலையில் இன்று காலை  தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதும் அவர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். பின்னர்  மாளிகைக்கு திரும்பிய அவர்,  தனதுஎக்ஸ்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில்,   பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது.  அதனால்  வெளிநடப்பு செய்ததாக கூறி இருந்தார்.   எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது கவலைக்குரிய செயல். தேசிய கீதத்தை மதிப்பதே அனைவரின் முதல் கடமை. நாடாளுமன்றத்தில் கூட்டம் தொடங்கும்போது தேசிய கீதம் இசைக்கப்படுகிறது என்று கூறி இருந்தார்.

சில நிமிடங்களில் அதை நீக்கி விட்டார்.   10 நிமிடம் கழித்து மீண்டும் அதை  பதிவேற்றம் செய்தார். அதில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும்போது  முதலில் தேசிய கீதம் பாடப்படுகிறது என்ற வாக்கியத்தை மட்டும்  நீக்கி விட்டு சில எழுத்துப்பிழைகளையும் சரிசெய்து  மீண்டும்   அதை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் பிரதமர் அலுவலகம், உள்துறை அலுவலகம் டேக் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!