தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மசோதாக்களை அவர் ஆய்வு செய்ய காலம் நிர்ணயிக்க வேண்டும். மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில் போடுவதால் தமிழக அரசின் பணிகள் முடக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிசேக் சிங்வி, வில்சன் ஆகியோர் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் இன்று ஆஜராகினர். அப்போது கவர்னர் மீதான வழக்கு வரம் 10ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்தது. எனவே ரவி மீதான வழக்கில் அன்றைய தினமு் முக்கியமான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கலாம் என எதிர்க்கட்சித்தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.