திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடை வீதியில் திருச்சி மதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக ஆளூநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் தமிழக அளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக வடக்கு
மாவட்ட செயலாளர் டிடிசி சேரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மதிமுக ஒன்றிய செயலாளர் அன்புச் செல்வம் ,துணை செயலாளர் சுப்பிரமணியம் ,ஆட்டோ மணி ,செல்வேந்திரன் சமயபுரம் ராதாகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் ஜீவா, திமுக ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் ,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.