Skip to content

கவர்னர் மும்மொழி விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை…கனிமொழி எம்பி…

  • by Authour

திமுக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய கனிமொழி, “திமுக மேற்கொள்ளும் நகர்வுகளை கண்டு பாஜக அலறுகிறது. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது பாஜக? தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இல்லாத எதிரியை கொண்டு வந்து மேடையில் அமர வைத்து பேச வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எதிரிகளே இல்லை என்ற களம் இன்று திமுகவுக்கு உள்ளது. நாங்கள் ஒன்றிய அரசிடம் கேட்பது மாநில உரிமைகள். இந்த இனத்தை மொழியை காப்பதற்கான முன்னெடுப்புகள் திமுக மேற்கொள்கிறது. பாராளுமன்றத்தில் இந்தி தெரியாத எங்களுக்கு அங்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தி படித்த யாருக்கும் புதிய லாபம் எதுவும் கிடைக்கவில்லை. தேவைபடும் போது தனிப்பட்ட முறையில் மொழியை கற்றுகொள்வார்கள். இந்தி படிக்கவில்லை என்றால் மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க மறுக்கும் போது தான் பிரச்சனை வருகிறது.

Image

தொகுதி மறுவரையரை நடப்பதற்கு முன்னாள் மக்கள் தொகை அடிப்படையில், இவற்றை செய்தால் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிளும் தொகுதி மறுவரையில் நாடாளுமன்ற தொகுதிகள் குறைய உள்ளது. 39 எம்பிகள் இருந்தே நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாகவே, இங்கு மக்கள் தொகை கட்டுக்குள் உள்ளது. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையரை தேவை இல்லை. தமிழகத்தில் பிஜேபி தவிர எல்லா கட்சிகளும், புதிய கல்விக் கொள்கை தேவையில்லை எனக் கூறுகிறோம்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்கிறபோது ஆளுநர் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

error: Content is protected !!