தமிழக ஆளுனர் ரவி ஆரோவில் நிர்வாகக்குழு தலைவராக பதவி வகிக்கிறார். இரட்டை பதவி வகிக்கும் ரவியை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இன்று அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. ஜனாதிபதியோ, கவர்னரோ நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அந்த தீர்ப்பின்படி இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறிய ஐகோர்ட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.