கவர்னர் ரவி இன்று சட்டமன்றதில் உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை வாசிக்காமல், தன் இஷ்டத்திற்கு சிலவற்றை சேர்த்து வாசித்தார். இந்த நிலையில் அவர் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். கவர்னரின் இந்த செயலை கண்டித்து வரும் 13ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
