தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடதக்கது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….
- by Authour
