Skip to content
Home » கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

கவர்னர் வெளியேறியது குறித்து   அமைச்சர் சிவசங்கர்  நிருபர்களிடம் கூறியதாவது:

கவர்னர் ரவி கடந்த முறையும் பாதியிலேயே வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தார்.  இப்போதும் அவர் பேரவையை அவமதித்துள்ளார். இதற்காக  அவர் தான்  மன்னிப்பு கேட்க வேண்டும்.  அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை தடுக்கவே  கவர்னர் வெளிநடப்பு செய்துள்ளார்.  தமிழக சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவது தான் மரபு. தேசிய பக்திக்கு ஒட்டுமொத்த  குத்தகையே  தான்,  தான் என கவர்னர் நினைக்கிறார்.  கவர்னர் பதவி குறித்து மாறுபட்ட கருத்து இருந்தாலும்  நாங்கள்  கவர்னரை  மதிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.