தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவுசார் மையத்தில் நூலகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு கணினி வசதிகளுடன் ஏராளமான புத்தகங்களை கொண்ட இந்நூலகத்தில் மாணவ, மாணவிகளிடம் போட்டித் தேர்வுக்கு நன்கு படித்து தயார் செய்யுமாறும், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நூலகர் மித்ரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.