குடியரசு தினத்தையொட்டி சென்னை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார். கவர்னர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கவர்னரின் செயலாளர் நேரில் சந்தித்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார். இதற்கிடையே இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ராஜ்பவனில் இன்று மாலை கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கெற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிறைவடைந்த குடியரசு தின விழாவில் கை கொடுத்து சிரித்த முகத்துடன் கவர்னரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.