தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் அரசு தயாரித்த பேச்சை தான் கவர்னர் பேச வேண்டும் என்ற மரபு இருக்கிறது. ஆனால், பேரவையில் உரையாற்றிய தமிழக கவர்னர் ஆர் என் ரவி சில வாக்கியங்களை விட்டு விட்டு படித்தார். இதனால் கவர்னர் பேரவையில் இருக்கும் போதே அவருக்கு எதிராக சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது சில பேச்சுகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதே போல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்திலும் கவர்னர் தனது அதிகாரத்தில் இல்லாத செயல்களை செய்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை ஏற்க முடியாது என்று சில நாட்களுக்கு முன்னர் கவரனர் கூறினார். ஆனால் தமிழ்நாடு அரசோ அரசாணை பிறப்பித்தது. இதன் மூலம் குட்டு வாங்கிய கவர்னர், தொடர்ந்து தனது அதிகாரத்தை மீறும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினமும் இதுபோன்று அமைச்சரை நீக்குவதாக கூறி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தா இது குறித்து கவர்னர் தரப்பை தொடர்பு சட்டத்தின் மீதான புரிதல் இல்லாமல் செயல்படுவது தெள்ளத்தெளிவாக தெரிவதாகவும் உடனடியாக அந்த உத்தரவை திரும்ப பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் உத்தரவிட்ட தகவல் வெளியானதும், நாடு முழுவதும் சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் குறித்த தகவல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரியவந்ததும், உடனடியாக ஆர்.என்.ரவியை தொடர்பு கொண்டு, தேவையில்லாத சட்டச் சிக்கலை உண்டு பண்ண வேண்டாம். அந்த உத்தரவை வாபஸ் பெறுங்கள்.. எனஅவர் உத்தவிட்டதாகவும். அதைத் தொடர்ந்துதான் மீண்டும் நள்ளிரவில் முதல்வருக்கு கவர்னர் கடிதம் எழுதி வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது..
அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்… அலறிய டில்லி போன்கள்.. நள்ளிரவில் நடந்தது என்ன?
- by Authour