அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் சோளங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் வெளியில் வந்தால், தொடர்ந்து மது குற்ற செயல்களில் ஈடுபடுவார் என்பதால், இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து சின்னதுரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
