நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இதனை கொண்டாடும் வகையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்ளது. சிறப்பு டூடுலில் சந்திரயான் 3 நிலவை சுற்றி வருவதும், தென் துருவத்தில் கால் பதித்ததும், இந்தியா சிரிப்பது போன்ற கார்டூன் வண்ணமயமான நிறங்களில் அழகாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. டூடுலை கிளிக் செய்ததும், சந்திரயான் 3 பற்றிய தகவல்கள் மற்றும் செய்தி குறிப்புகள் அடங்கிய சிறப்பு பக்கம் திறக்கிறது.