உலகம் முழுவதும் இன்று (மார்ச்8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்கள். சிறந்த சேவயைாற்றிய பெண்களும் இன்றைய தினத்தில் கவுரவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கூகுள் நிறுவனமும் மகளிர்தினத்தையொட்டி பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இன்று டூடுல் வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு டூடுலில், ஒரு பெண் குழந்தை, ஒரு நடுத்தர வயது பெண் மற்றும் ஒரு வயதான பெண்மணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த டூடுல் ஒரு பெண் சிறு வயது முதல் வயது முதிர்வு வரை உள்ள காலகட்டதை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் அதன் விளக்கத்தில் மகளிர் தின வரலாறு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டூடுலை சோஃபி டியாவோ என்ற டூடுல் கலைஞர் உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருத்தியலாக மகளிர்க்காக முதலீடு செய்வோம்: வளர்ச்சியை வேகப்படுத்துவோம் (‘Invest in Women: Accelerate Progress) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.