ஒடிசாவின் பர்கர் மாவட்டம் மெந்தபாலி அருகே உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. டுங்குரி சுரங்கத்தில் இருந்து பர்கர் நோக்கி சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தபோது சம்பர்தாரா பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்வத்தில் ரெயில்வேயின் பங்கு இல்லை என்று கிழக்கு கடற்கரை ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது முழுக்க முழுக்க தனியார் சிமென்ட் கம்பெனியின் நாரோ கேஜ் சைடிங் ஆகும். ரோலிங் ஸ்டாக், என்ஜின், வேகன்கள், ரெயில் தடங்கள் (நெருங்கிய கேஜ்) உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளும் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருவதாக கிழக்கு கடற்கரை ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.