இந்தியாவில் தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3வது வாரம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு மே 30-ம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, ஜூலை 2-ம் தேதி நாடு முழுவதும் பரவியது.இதனால் வழக்கத்தை விட அதிக மழை பொழிவை கொடுத்தது.
இந்த நிலையில் மேற்கு ராஜஸ்தான் மற்றும் கட்ச்சின் சில பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விடைபெற்றது. இயல்பு நாளான செப்.17-க்கு பதில் 7 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கியது. ராஜஸ்தானில் இருந்து விலக தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் படிப்படியாக விடைபெற்றது.
குட்பை சொல்லி விட்டு கிளம்பியது தென்மேற்கு பருவமழை…. இனி வடகிழக்கு பருவமழையை வரவேற்க தயாராவோம்.