Skip to content
Home » நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை….. நடிகர் விஜய் பேச்சு

நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை….. நடிகர் விஜய் பேச்சு

  • by Senthil

நடிகர் விஜய் கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும்  சட்டமன்ற தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய நிலையில்  இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார்.

முதற்கட்டமாக, இன்று சென்னை  திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. அதில், கோவை, ஈரோடு, மதுரை, அரியலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார்.

இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.   அவர்களை விஜய் கட்சியினர்  தனி வாகனங்களில் அழைத்து வந்தனர். பாராட்டு விழா நடைபெறும் மண்டபத்துக்கு   வந்த மாணவர்கள், பெற்றோரை   அவர்களது  அடையாள கார்டை  பார்த்து உள்ளே அனுப்பினர்.

உள்ளே சென்றதும் மண்டபத்தின் நுழை வாயிலில் புஸ்சி ஆனந்த், அனைவருக்கும் ஒரு பை வழங்கினார். அதில்  பிஸ்ட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ், குடிநீர் பாட்டில் இருந்தது. அதனை பெற்றுக்கொண்ட அனைவரும்  வரிசையாக  உட்கார வைக்கப்பட்டனர். நடிகர் விஜய் காலையிலேயே வந்து மண்டபத்தின் ஒரு அறையில் தங்கி் இருந்தார். பின்னர் 10 மணி அளவில் விஜய் விழா நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார்.

அப்போது ஒரு பெண்   நெற்றியில் திலகமிட்டு விஜயை வரவேற்றார். அதைத்தொடர்ந்து நெல்லை மாணவர் சின்னத்துரை அருகே விஜய் அமர்ந்தார்.

பின்னர் விழா மேடைக்கு சென்று  விஜய் பேசினார்.  அவர் பேசியதாவது:

நடந்து முடிந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு,  தம்பி தங்ககைகளுக்கு வாழ்த்துக்கள்.இந்த பங்ஷன் சிறப்பாக  நடக்க காரணமான  ஆனந்த், ராஜேந்தி்ரன், தவெக தோழர்களுக்கும்  வணக்கம். எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவர்களை சந்திப்பதில்  மகிழ்ச்சி.

உங்களை பார்த்தில் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது. இன்று காலை முதல் அது எனக்கு உருவாகி உள்ளது.    அடுத்த கட்டத்தை நோக்கி  நீங்கள் போகிறீர்கள். உங்களில்  சிலருக்கு சில பிக்சர் இருக்கும். பைலட், டாக்டர்  ஆக வேண்டும் என இருக்கும்.   தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் சிலருக்கு கன்பியூசன் இருக்கும். எல்லாத்துறையும் நல்ல துறைதான். உங்களின்  100 சதவீத உழைப்பை கொடுங்கள். அதில் உள்ள ஆப்சன் பற்றி தெரிந்து கொண்டு பெற்றோர், ஆசிரியர்களிடம் டிஸ்கசன் செய்யுங்கள்.

நான் சில கேரியர் கைடன்ஸ் கொடுக்க ஆசைப்படுகிறேன்.  மருத்துவம், பொறியியல் மட்டும் தான் சிறந்தது என்று சொல்ல முடியாது. நமக்கு எது இல்ல,    எல்லா துறையும் நல்ல துறை தான். 100% உழைத்தால் வெற்றி பெறலாம்.  நம்மிடம் எல்லாமே இருக்கிறது. எது தேவைப்படுகிறது என்றால் நல்ல தலைவர்கள். நான் அரசியல் ரீதியாக மட்டும் இதை  சொல்லல.  நீங்கள்  ஒரு வேலைக்கு சென்றால் அங்கு தலைமையிடத்துக்கு வரவேண்டும். அதையும் சேர்த்து  சொல்கிறேன். நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணும்,  படித்தவர்கள் தலைவர்களா வரணுமா, வரவேண்டாமா(வரணும் என கோஷம்). கண்டிப்பாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

நீங்கள் படிக்கும்போதே மறைமுகமாக  அரசியலுக்கு வரணும், ஒரே செய்தியை ஒரு பேப்பர் ஒரு மாதிரி எழுதுவாங்க. இன்னொரு பேப்பர்  வேறு மாதிரி எழுதுவாங்க. செய்தி வேற கருத்து வேற.  ஒருவர் முன் பக்கத்தில்  செய்தி போடுவார்கள். ஒருவர் கடைசி பக்கத்தில் கூட போடுவார்கள்.  நல்லவர்களை  கெட்டவர்கள் போல காட்டுவார்கள். கெட்டவர்களை நல்லவர் போல காட்டுவார்கள்.  சோசியல் மீடியாவில் புரணி பேசுவார்கள். அதை நம்பாதீர்கள்.

நீங்கள் எல்லாம் படியுங்கள்.  ஒரு சில அரசியல் கட்சிகள்  பொய்யான பிரசாரம் செய்தவதை நம்பாமல்  நல்ல தலைவர்களை தேர்ந்தேடுக்கவேண்டும்.    அதற்கான விசாலமான பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பிரண்ட்ஷிப்   ேதர்வு செய்யுங்கள். உங்கள் நட்பு வட்டாரத்தில் தவறு இருந்தால்,  அவர்களை குறை  சொல்லாதீர்கள்.  திருத்துங்கள். அந்த தவறில் நீங்கள் ஈடுபடாதீர்கள்.

தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது.  இளைஞர்கள் அதற்கு அடிமையாகி உள்ளனர்.  எனக்கே அச்சமாகத்தான் இருக்கிறது.  போதை பொருளை  ஒழிப்பது   அரசின் கடமை.  என நான் பேச வரவில்லை. அதற்கான இடம் இது இல்லை. அரசை விட நம் லைபை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.  செல்ப் கண்ட்ரோல் வேண்டும்.  சுய ஒழுக்கம் வேண்டும்.  எந்த காரணத்திற்காகவும், உங்கள் அடையாளங்களை  இழந்து விடாதீர்கள்.

(அப்போது போதை பொருள் ஒழிப்புக்கு எதிரான  உறுதி மொழியை  அவர் வாசித்தார்.  அதை மாணவர்கள்  சொல்லி உறுதி எடுத்துக்கொண்டனர்.)3ம் தேதி வர உள்ள மாணவர்களுக்கும் சேர்த்து தான் இதை சொல்கிறேன். மீண்டும்.  அட்வைஸ் சொல்ல விரும்பவில்லை.  உங்களுக்கு அட்வைஸ் பிடிக்காது.

இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து சென்னை மாவட்டம் கொளத்தூர் மாணவிக்கு முதன் முறையாக பரிசு வழங்கி, பரிசளிப்பு விழாவை தொடங்கி னார். தொடர்ந்து  21 மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கும் விஜய் பரிசுகளை வழங்கி பொன்னாடை போர்த்தினார்.

இன்னும் 17 மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூலை மாதம் 3ம் தேதி விஜய் பரிசுகள் வழங்கி கவுரவிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!