Skip to content

‘குட் பேட் அக்லி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த தேவிஸ்ரீ பிரசாத் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இப்படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் அஜித்குமார் முடித்து செய்து விட்டார். இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்ததால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் தற்போது ‘விடாமுயற்சி’ படமும் ஒரு சில காரணத்தால் பொங்கல் பண்டிகையில் வெளியாக வில்லை. இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

error: Content is protected !!