இந்திய ரயில்வே தொழிலாளர்களின் SRMU பேரியக்க பொதுச்செயலாளர் AIRF அகில இந்திய தலைவர் டாக்டர் N. கண்ணையா ஆணைக்கு இணங்க திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை எலக்ட்ரிகல் கிளை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ப1.1.2004 க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அமலில் உள்ள நாசகார புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யகோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பொன்மலை ஒருங்கிணைப்பாளர் K. முருகானந்தம் முன்னிலையில் கிளை செயலாளர் N. வீரபாகு தலைமையில் TLS ஷாப் முன்பாக NPS என்ற புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து OPS க்கு இணையான கியாராண்டி பென்சன் திட்டத்தை உடனடியாக வழங்க கோரி உத்தரவு பிறப்பிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர் P. ரமேஷ்,உதவி தலைவர் A. MD. இபுறாஹிம் பொருளாளர் V. திருநாவுக்கரசு உதவி செயலாளர்கள் C. செல்வேந்திரன் M. சரவணன் R. பரத்குமார் S. நாகராஜன் K. விஜயகுமார் D. விக்னேஷ் C. அர்ஜுனன் இளைஞர் அணி தலைவர் S. பிரபுகுமார், செயலாளர் R. பார்த்திபன் ஆகியோர் தலைமையில் இளைஞர் அணியினரும் சகோதரிகள் அணி தலைவி V. சுகன்யா செயலாளர் D. அனிதா ஆகியோர் தலைமையில் சகோதரிகளும், ஒருங்கிணைப்பாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள், ஷாப் கவுன்சில் உறுப்பினர்கள், வெளி மாநில தொழிலாளர் கவுன்சில், சூப்பர்வைசர் கவுன்சில் ஆகியோர் திரளாக கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை வலியுறுத்தி விண்ணதிர கோசங்கள் எழுப்பினர்.கோட்ட உதவி செயலாளர் V. டேனியல்ராஜ் நன்றி கூறினார்.