சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த சில பயணிகளின்நடவடிக்கையில் சந்தேகமடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் ஜீன்ஸ் பேண்ட், உள்ளாடை ஆகியவற்றை சோதித்தபோது, அதில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதில் 683 கிராம் தங்கம் இருந்தது. அவை 24 காரட் தங்கம். அதன் மதிப்பு ரூ.42 லட்சத்து 69 ஆயிரம். தொடர்ந்து அந்த பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி்னர்.