சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர் அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற பயணி தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்திவந்த 460 கிராம் எடையுள்ள, 33 லட்சத்து 15 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராஜேந்திரனிடம் வி்சாரணை நடக்கிறது.