மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு திருச்சி வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்பொழுது பெண் ஒருவர் தனது ஜாக்கெட்டில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூபாய் 27 லட்சத்து 14 ஆயிரத்து 225 மதிப்புள்ள 359.5கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்
பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பெண் கோலாலம்பூர் விமான நிலையத்திற்குள் நுழையும் பொழுது அங்கு இருந்த நபர் ஒருவர் இந்த தங்க சங்கிலிகளை திருச்சியில் கொண்டு போய் கொடுத்து விடுங்கள் எனக் கூறி அதற்காக 5000 ரூபாய் பணம் தருகிறேன் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தது தெரியவந்தது இது குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.