மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பேக்கின் ஸ்குரு பொருத்தி உள்ள பகுதிகில் ஸ்குருவை நீக்கி பார்த்தபோது அதற்குள் சிறிய ஆணி வடிவில் தங்க கம்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை235 கிராம் எடை இருந்தது. அதன் மதிப்பு 16.17 லட்சம். இவை 24 காரட் தங்கம். இது தொடர்பாக அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.