மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆண் பயணியின் லக்கேஜ்களை சோதனை செய்தபோது அதில் செவ்வக வடிவிலான மெல்லிய 12 தங்க தகடுகள் இருந்தது. அவற்றின் எடை 360 கிராம்.இதுபோல 179 கிராம் எடை கொண்ட செயினும் இருந்தது. அவற்றை மறைத்து அவர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை 24 காரட் தங்கமாகும். இதன் மதிப்பு ரூ.31 லட்சத்து 62 ஆயிரத்து 313 ஆகும். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
