தமிழகத்தில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறாது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும், பார் வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.