தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஆபரணதங்கத்தின் விலை பவுன் 59,600 ஆக விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,525 ஆக விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ.60,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் இந்த விலையானது இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வெள்ளி விலையானது இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி 103.90 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03, 900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.