இந்த ஆண்டு ஜனவரியில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,425க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.67,400க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு கிராம் ரூ.113க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.68,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.8,510க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.114க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கு விற்பனையானது.