தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) முழுவதும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. ஆனால் பெரும்பாலான நாட்கள் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்வை நோக்கியே செல்கிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5,775-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதைபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.83.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.83,700-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 வரை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன் வட்டியை 0.25% உயர்த்தியதே தங்கம் விலை உயர காரணம் என கூறப்படுகிறது.