Skip to content

புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

  • by Authour

தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதைபோல வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் 6 இலக்க எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!