தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே இருந்தது. கடந்த திங்கட்கிழமை ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.55ஆயிரத்து 200க்கு விற்பனையானது. அடுத்தடுத்த நாட்களில் விலை குறைந்து கொண்டே இருந்தது. இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,650க்கு விற்பனையாகிறது.தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது. இதனால் இன்று நகை வாங்க வந்த பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.