Skip to content

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.  ஒருநாள் ஏறுவதும், அடுத்த நாள் இறங்குவதுமாக தங்கம் விலை உள்ளது.  நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய  உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 595 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!