Skip to content

தங்கத்தில் தட்டு வடை செட் …. சேலத்தில் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்த வியாபாரி…

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சேலம் பட்டை கோயில் அம்மாபேட்டை மெயின் ரோடு செல்லும் சாலையில் தட்டுவடை செட் கடை நடத்தி வருகிறார் .இவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தட்டுவடை வியாபாரம் செய்து வரும் நிலையில் அக்ஷய திருதியை முன்னிட்டு தங்க தட்டு வடை செய்து கொடுக்க முடிவு செய்துள்ளார்.

தங்க தட்டு வடை செட் விற்பனை செய்ய முடிவு செய்த நிலையில்  இதை அறிந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும்

மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர்.  உலர் பழவகைகள், காய்கறிகள், தட்டு வடை ,சட்னி மற்றும் தங்க பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்தி தங்க தட்டு வடை செட் தயாரித்து 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளார் , நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 வரை  வருமானத்தை பார்த்து வந்த ஸ்ரீதர்,  அக்ஷய திருதியை முன்னிட்டு தங்க தட்டு வடை செட்டை விற்பனை செய்ததன் மூலம் ஒரு லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது.

தட்டு வடை செட்டு மீது வைக்கப்படும் தங்க பேப்பர் உண்ணக்கூடியது தான் இதை உண்பதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.  இருப்பினும் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் அவரது கடையிலிருந்து கோல்ட் பேப்பர் ஆகியவற்றை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!