Skip to content
Home » ஏறுது….ஏறுது…. ஏறிக்கிட்டே இருக்கு தங்கம் விலை….

ஏறுது….ஏறுது…. ஏறிக்கிட்டே இருக்கு தங்கம் விலை….

  • by Senthil

தங்கத்தின் விலை மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக தங்கத்தின் விலை கண்ணாமூச்சு காட்டி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளியின் விலை ரூ.1.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 83 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.83,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!