கடந்த மார்ச் மாதம் முழுவதும் அடுத்தடுத்து சங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தது. புதிய உச்சமாக கடந்த மார்ச் 27-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்தது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 85 ரூபாய் அதிகரித்து, 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.680 உயர்ந்து புதிய உச்சமாக 51,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 60 பைசா உயர்ந்து, 81 ரூபாய் 60 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.