தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றிற்கு 30 பைசா அதிகரித்து 76 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் அதிகரித்து 76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.