Skip to content
Home » ஆசிய போட்டி ….. தங்கம் வெல்வதே இலக்கு…. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்

ஆசிய போட்டி ….. தங்கம் வெல்வதே இலக்கு…. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இந்திய ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த சமயம் உலகக் கோப்பை போட்டி தொடங்க இருப்பதால் முன்னணி வீரர்கள் யாரும்  ஆசிய போட்டி அணியில் இடம் பெறவில்லை.

ஆசிய விளையாட்டு போட்டிக்கு  இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்ட்ட ருதுராஜ் கெயிக்கவாட் கூறுகையில் , தங்கப் பதக்கம் வெல்வதும், பதக்க மேடையில் ஏறி நின்று நாட்டுக்காக தேசிய கீதம் பாடுவதும்தான்  எனது கனவாக உள்ளது.

பிசிசிஐ, நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் வழங்கிய இந்த வாய்ப்பிற்காக நான்  நன்றி கூறுகிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது ஒரு பெருமையான உணர்வு மற்றும் இதுபோன்ற ஒரு சிறந்த நிகழ்வில் அணியை வழிநடத்துவது எனக்கும் தனிப்பட்ட முறையில் மற்றும் என்னுடன் இருக்கும் மற்ற அனைத்து அணி உறுப்பினர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.நாங்கள் அனைவரும் இளைஞர்கள் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல்லில் இந்தியா ஏ மற்றும் இந்தியாவுக்காக விளையாடி வருகிறோம். அணியில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் இது உற்சாகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *